'டிஎஸ்பி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'டிஎஸ்பி'. வாஸ்கோடகாமா என்ற மிரட்டலான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்த படத்தில் அனு க்ரீத்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரபாகர், ‘குக் வித் கோமாளி’ புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார்.
 - cini express.jpg)