கண்ணீர் மல்க பேட்டியளித்த டி.ஆர்!

 
1
உயர் சிகிச்சை பெறுவதற்காக திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் இன்று அமெரிக்கா சென்றார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த டி.ஆர்.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''நான் உயர் சிகிச்சைக்காக இப்போதுதான் அமெரிக்கா போகிறேன். ஆனால் அதற்குள்ளேயே நான் அமெரிக்கா போயிட்டேன் அங்கே போயிட்டேன் இங்கே போயிட்டேன்னு தப்பும் தவறுமா செய்திகள் வெளியாகிறது. நான் வாழ்க்கையில எதையுமே மறைச்சதில்லை. நான் முகத்துலதான் வைத்திருப்பேன் தாடி, நான் எதையுமே மறைச்சு வைக்கமாட்டேன் மூடி.

நானே சினிமா கதையாசிரியர். வித விதமா கதை எழுதி வசனம் எழுதி, திரைக்கதை எழுதி யார் யாரோ என்ன என்னவோ பண்ணாங்க... ஆனால் இறைவனைமீறி, விதியை மீறி, கர்மாவை மீறி எதுவும் நடக்காது. நான் ஒரு சின்ன நடிகன், சாதாரண சின்ன கலைஞன், லட்சிய திமுக எனும் சின்ன கட்சியை நடத்துபவன்.

ஆனா என் மேல பாசம் வைத்து, பரிவு வைத்து பல பேர் செய்த பிரார்த்தனை, ஆராதனை காரணமாகத்தான் இன்று நான் இங்கு நின்னுகிட்டு இருக்கேன். எனது ரசிகர்களுக்கும், எனது மகன் சிம்பு ரசிகர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும், கட்சியை தாண்டி எனக்காக பிரார்த்தித்த அனைவரும் எனது நன்றி'' என்றார்.

From Around the web