உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே..?

 
1

உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்து இந்தியன் 2 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படம் விபத்து, கொரோனா போன்ற காரணங்களால் பல வருடங்களாக முடங்கி இருந்தது. இதையடுத்து படத்தை கைவிட்டு விட்டதாக இணையதளங்களில் பரவிய தகவலை தயாரிப்பு தரப்பில் மறுத்தனர். தற்போது படத்தின் இயக்குனர் ஷங்கர், தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தை முடித்து விட்டு இந்தியன்-2 படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

இதில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்து இருந்த காஜல் அகர்வால் படத்தில் இருந்து விலகி விட்டார். எனவே அவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட முடிவு செய்து உள்ளனர். காஜல் அகர்வாலுக்கு பதிலாக கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க இந்தி நடிகை தீபிகா படுகோனேவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபிகா படுகோனே ஏற்கனவே தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ளார். தீபிகா படுகோனே இப்படத்தில் நடிக்க மறுத்தால் இந்தி நடிகை கேத்ரினா கைப்பை அழைக்க திட்டமிட்டு உள்ளனர்.

From Around the web