ட்ரெண்டிங் ஆகும் லவ் டுடே படத்தின் நீக்கப்பட்ட காட்சி..!!
Nov 23, 2022, 09:05 IST

90ஸ் கிட்ஸ் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கோமாளி என்ற படத்தை எடுத்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் அடுத்து 2கே கிட்ஸ் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு லவ் டுடே என்ற படத்தை இயக்கினார்.
மேலும் இந்த படத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனே ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இவானா என்ற புதுமுகம் அறிமுகமாகினார்.இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த படத்திற்காக எடுக்கப்பட்டு பின்னர் வேண்டாம் என நீக்கப்பட்ட ஒரு காட்சி வெளியாகி, வைரலாகி வருகிறது.