தனுஷ், ‘தி க்ரே மேன்’ ஹாலிவுட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

 
1

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தின் பிரம்மாண்டத் தயாரிப்பாக 'தி க்ரே மேன்' என்கிற திரைப்படம் உருவாகிறது. 2009ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் க்ரேனி என்பவர் எழுதிய ‘தி க்ரே மேன்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. இதில் ரையான் காஸ்லிங், க்றிஸ் எவான்ஸ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்', 'எண்ட்கேம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர்.தனுஷ், ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இதில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர். அனா டீ அர்மாஸ், ஜெசிகா ஹென்விக், வாக்னர் மோரா, ஜூலியா பட்டர்ஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள்.

தனுஷ் அமெரிக்கா சென்று மூன்று மாதங்கள் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்தது. படத்தில் தனுஷ் வில்லனாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தி க்ரே மேன் படத்தில் நடிக்கும் நடிகர்களின் தோற்றங்கள் வெளியாகி உள்ளன. தனுஷ் தோற்றத்தையும் படக்குழுவினர் வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். கிறிஸ் இவான்சுடன் தனுஷ் இருக்கும் புகைப்படமும் வந்துள்ளது.

இந்த படங்கள் வலைத்தளத்தில் வைரலாகிறது. தி க்ரே மேன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது.

From Around the web