தனுஷ் பட நடிகையின் உயிருக்கு ஆபத்து.!!

 
1

தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்தவர் நடிகை மஞ்சுவாரியர்.நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான, நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள இயக்குனர் சணல் குமார் சசிதரன் தனது வலைத்தளப் பக்கத்தில், நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், அவரை கந்து வட்டிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார். இவரின் இந்த பதிவு மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் மஞ்சு வாரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் சணல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மஞ்சு வாரியர் அளித்த புகாரில், சமூக வலைத்தளங்களில் தன்னை தொடர்ந்து அவமானப் படுத்துவதாகவும், தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சணல் குமார் செயல்படுவதாகவும், தான் செல்லும் இடத்திற்கு எல்லாம் பின் தொடர்ந்து வந்து என்னை தொந்தரவு செய்கிறார் என்றும் மஞ்சு வாரியர் குறிப்பிட்டுள்ளார்.

From Around the web