நீண்ட தாடியுடன் வலம் வரும் தனுஷ்..!!
நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகனும், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
1930-களில் உள்ள கதையை கொண்டு பிரீயட் திரைப்படமாக இப்படம் உருவாகிறது. இலங்கை போரில் போராளியாக இருந்த வல்லிபுரம் வசந்தன் என்கிற கேப்டன் மில்லர் என்பவரின் கதைதான் இப்படமாக உருவாகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் தனுஷின் முதல் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது.
இதில் கேப்டன் மில்லர் ஆக நடிக்கும் தனுஷின் நியூ லுக் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இதில் நீண்ட தாடியுடன் தனுஷ் வித்தியாசமான லுக்கில் உள்ளார்.
ஏற்கனவே கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முடிந்துவிட்டது. தற்போது டிசம்பர் மாதத்தில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது.
கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் உரிமம் ஆகியவை தற்போதே 120 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. எனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் தனுஷின் நியூ லுக் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்திருக்கிறது.