தனுஷ் ரசிகர்களே தயாரா..!! நாளை ஒடிடியில் வெளியாகிறது திருச்சிற்றம்பலம்..!!

புதுப்பேட்டை மாதிரி எகிறி அடிக்கிற கேரக்டர்லாம் பண்ணின தனுஷ், இறங்கி வந்து முழு காதல் கதையில் நடித்திருக்கும் படம் தான் திருச்சிற்றம்பலம்.
மித்ரன் ஜவஹர் - தனுஷ் கூட்டணி ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக இணைந்துள்ளனர். யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் படங்களை அடுத்து இந்தப் படத்திற்காக அந்தக் கூட்டணி இணைந்துள்ளது.
நடிகைகள் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் இந்தப் படத்தின் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் பாரதிராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நமக்குப் பக்கத்திலேயே பேரண்பு காட்ற ஆள் இருந்தாலும், வெளியில அன்பைத்தேடி மனசு அலை பாயுமில்லையா.! அப்படிதான் அலைகிறார் தனுஷ். அந்த ரெண்டு காதலுக்கும் நித்யா மேனன்தான் மாஸ்டர் பிளான் போட்டுக்கொடுக்கிறார். ரெண்டும் ஃபிளாப்.தான் தேடிக்கிட்டிருக்கிற பேரன்புக்காரி, கூடவே இருக்கிற நித்யா மேனன்தான் என்று தெரிந்த பிறகு நடக்கிற ட்விஸ்ட்டும்; மிச்சமும் க்ளைமாக்ஸ்.
இந்நிலையில் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து, 2022-ம் ஆண்டின் பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக மாறியது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிறகு, படம் நாளை செப்டம்பர் 23 டிஜிட்டல் பிரீமியர் செய்ய தயாராக உள்ளது. ‘திருச்சிற்றம்பலம்’ செப்டம்பர் 23 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஒடிடியில் வெளியாகிறது.