இன்று மாலை தனுஷ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது..!!  

 
1

தனுஷின் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் நானே வருவேன். இதுநாள் வரை சிறந்த திரைப்படங்களை ரசிகர்களுக்கு அளித்துள்ள தனுஷ் – செல்வராகவன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளதால் இப்படத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.இந்த திரைப்படம், செல்வராகவன் இயக்கி, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். நடிகர் தனுஷுடன் இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, என பலர் நடித்துள்ளனர். மேலும், எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நானே வருவேன் திரைப்படம் பொன்னியின் செல்வன் வெளியாகும் அதே செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என தகவல் பரவின.மேலும் தற்போது நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நானே வருவேன் திரைப்படத்தின், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று மாலை 4.40 மணிக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "   ஒரே ஒரு ஊருக்குள்ளே, இரண்டு ராஜா இருந்தாராம்.. ஒரு ராஜா நல்லவராம், இன்னொரு ராஜா கெட்டவராம் " என பதிவிட்டு தெரிவித்துள்ளார். இந்த பதிவை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருவதோடு, படத்திற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


 

From Around the web