அமீரின் காதலுக்கு பச்சை கொடி காட்டினாரா பாவனி ..?

 
1

விஜய் டிவியின் சின்ன தம்பி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான பாவ்னி பிக் பாஸ் தமிழ் 5 இல் பங்கேற்றார், இது அவருக்கு இப்போது ஒரு பெரிய திருப்புமுனையை அளித்துள்ளது. நிகழ்ச்சியின் மூலம் பாவ்னி ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார், நிகழ்ச்சியின் இரண்டாவது ரன்னர் அப் ஆனார். பாவ்னியின் மனவலிமை மிகவும் பேசப்பட்ட அம்சங்களில் ஒன்றாகும் .

அதேபோல் இந்த பக்கம் விஜய் டிவியில் நடன இயக்குனராக வந்து பிக் பாஸ் தமிழ் 5 இல் கடைசி பாதியில் கலந்துகொண்டு பேரையும் புகழையும் பெற்றவர் அமீர் .

வைல்டு கார்டு என்டிரியாக வந்தாலும் அமீர் , பாவனியிடம் தனது காதலை அனைவர் முன் வெளிப்படையாக சொன்னார். ஆனால் பாவனி அதை அப்போது ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்கிடையில் பாவனி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீருக்கு ஒரு அழகான பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து அவருடனான நெருக்கமான எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது பாவனி மற்றும் அமீர் இருவரும் ஜோடியாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆடி வருகின்றனர். அவர்களது நெருக்கத்தை பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டார்களா என்கிற கேள்வியை தான் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

From Around the web