ஒரே வீட்டில் குடும்பம் நடத்தினாரா நடிகை அமலா பால்..? நீதிமன்றத்தில் ஆதாரங்கள் தாக்கல் செய்த முன்னாள் காதலன்..!! 

 
1

கடந்த 2010-ம் ஆண்டு ‘மைனா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகி அறிமுகமானவர் நடிகை அமலா பால். இந்த படத்தில் மலைவாழ் கிராமத்தில் வாழும் அழகிய பெண்ணாக இவர் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தெய்வத்திருமகள் படத்தின் படப்பிடிப்பின் போது ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மனமுவந்து பிரிவதாக இருவரும் அறிவித்து பிரிந்து விட்டனர். மலையாளம், தெலுங்கு, தமிழ் என நடித்துவரும் அமலாபால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

Amala Paul

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே பெரியமுதலியார்சாவடி பகுதியில் நடிகை அமலா பால் மற்றும் தயாரிப்பாளர் பவிந்தர்சிங் ஆகிய இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு சில மாதங்கள் தங்கியிருந்துள்ளனர். அப்போது  இருவருக்குள் சொத்து பரிவர்த்தனை நடந்துள்ளது. மேலும் சில தொழில்களிலும் முதலீடு செய்துள்ளனர். பிறகு பவிந்தர்சிங்கிடமிருந்து அமலாபால் சில  மாதங்களுக்கு முன்பு விலகி சென்றுவிட்டார்.

இந்நிலையில் கடந்த வாரம் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் அமலாபால் புகார் மனு  கொடுத்திருந்தார். அதில் தன்னிடம், பவிந்தர்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் பணம் பெற்றிருந்தனர். அதை கேட்டபோது நானும் பவிந்தர்சிங்கும் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவோம் என்று மிரட்டுவதாக கூறியிருந்தார். அதன்பேரில் டிஎஸ்பி இருதயராஜ் தலைமையிலான போலீசார் பவிந்தர்சிங், அவரது தந்தை சுந்தர்சிங் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குபதிந்து பவிந்தர்சிங்கை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவருக்கு ஜாமீன் கோரி வழக்கறிஞர் பாலாஜி வானூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

1

இதனை விசாரித்த வானூர் நீதிமன்ற நீதிபதி வரலட்சுமி, பவிந்தர்சிங்கிற்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் உடனடியாக நேற்று முன்தினம் இரவே விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து அவரின் வழக்கறிஞர் பாலாஜி கூறுகையில், அமலாபாலும், பவிந்தர்சிங்கும் திருமணம் செய்துகொண்டது சம்மந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலும் இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டு  ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி பவிந்தர்சிங்கை ஜாமீனில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் வெளியே வந்துள்ளார் என்றார். மேலும் அமலாபால் கொடுத்த புகார் பொய்யாக கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

From Around the web