பீஸ்ட் ட்ரைலரில் இதை கவனித்தீர்களா..!!

 
1

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது .மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அதன் சரியான நோக்கத்தை நிறைவேற்றி, பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.  வீர ராகவன் (விஜய்), ஒரு ரகசிய ரா ஏஜென்ட், பயங்கரவாதிகளின் குழுவால் ஷாப்பிங் மாலில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். விஜய்யின் கவர்ச்சியான இருப்பு மற்றும் ஸ்டைலான அதிரடி நகர்வுகள் ரசிகர்களிடையே பரவலான கவனத்தை ஈர்த்தது மற்றும் படத்தைப் பார்க்க அவர்களை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தது.

ட்ரைலரை பார்பதர்க்கே எதோ ஜேம்ஸ் பாண்ட் படம் பார்ப்பது போல் இருந்தது . அந்த அளவுக்கு தளபதியும் நெல்சனும் சேர்ந்து ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளனர் .இந்நிலையில் பீஸ்ட் ட்ரைலரில் பல்வேறு அரசியல் குறியீடுகள் இருப்பதாக தற்போது இணையத்தில் பல பேச்சுக்கள் பேச்சு எழுந்திருக்கிறது.

  • ‘இந்த அரசியல் விளையாட்டெல்லாம் நமக்கு செட் ஆகாது’
  • ‘I am not a Politician, I am a Soldier’ – இப்படி விஜய் நேரடியாகவே அரசியல் பேசும் வசனங்கள் ட்ரைலரில் இருக்கிறது.
  • மேலும் ட்ரைலரில் காவி நிற பேனரை விஜய் கத்தியால் கிழிப்பது போல ஒரு காட்சி இருக்கிறது. அதுவும் ஒரு அரசியல் குறியீடு தான் என தற்போது இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

அது மட்டுமின்றி எப்போதும் அரசியல் மீது ஆர்வம் இருப்பது போல காட்டிக்கொண்ட விஜய் தற்போது இப்படிப்பட்ட வசனங்கள் பீஸ்ட் படத்தில் பேசியது ஏன் என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

From Around the web