ஸ்ரீதேவி அணிந்து நடித்த புடவைகள் ஏலத்தில் விட முடிவு - இயக்குனர் கவுரி ஷிண்டே..!!

 
1

மறைந்த நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் தனது சினிமா பயணத்தை துவக்கி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியானார். எத்தனையோ சிறந்த வெற்றிப் படங்களில் நடித்து இருக்கிறார். இந்தி தயாரிப்பாளார் போனிகபூரை திருமணம் செய்த பிறகு 1997-ல் சினிமாவை விட்டு விலகி குடும்ப பொறுப்பை ஏற்கப்போவதாக அறிவித்தார். 

ஆனால் 2012-ல் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். இந்த படத்தை கவுரி ஷிண்டே டைரக்டு செய்தார். இங்கிலீஸ் விங்கிலீஷ் ரிலீசாகி 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. அஜித் மற்றும் ஸ்ரீதேவி முதல்முறையாக இணைந்து நடித்த படம் இங்கிலீஷ் விங்கிலிஷ். இதில் அஜித் ஒரு சில நிமிடமே தோன்றியிருப்பார். 

1

இந்நிலையில்  இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்துக்காக ஸ்ரீதேவி அணிந்து நடித்த புடவைகள் அனைத்தையும் ஏலத்தில் விட முடிவு செய்து இருப்பதாக இயக்குனர் கவுரி ஷிண்டே அறிவித்து உள்ளார்.

ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகையை ஏழை சிறுமிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

From Around the web