‘வெந்து தணிந்தது காடு’ ரசிகர்களுக்கு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் வேண்டுகோள்..!!

 
1

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை அடுத்து இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'.ஐசரி கணேஷ் சார்பாக வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தில் நடிகை சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார்.ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.  

வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு, சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவு மற்றும்  ஆன்டனி படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளனர்.   கேங்ஸ்டர் கதைக்களத்தில் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி இப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக மூன்று மிரட்டலான தோற்றத்தில் சிம்பு நடித்துள்ளார். இதில் ஒல்லியான தோற்றத்தில் நடித்துள்ள போஸ்டர்கள் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

1

இந்த படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் முதல் காட்சி நாளை காலை 4 மணிக்கு திரையிடப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தின் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டது. 

இந்நிலையில் காலையில் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு இயக்குனர் கெளதம் மேனன் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் இந்த படத்திற்கு என்ன வேணுமோ அதை மட்டுமே வைத்திருக்கிறேன். ஒரு நல்ல படத்தின் உலகத்துக்குள்ளே நுழைய போகிறோம் என்ற உணர்வுடன் படத்தை பாருங்கள். மற்ற எல்லா விஷயத்தையும் மறந்துவிட்டு படத்தை பாருங்கள். குறிப்பாக அதிகாலை காட்சி பார்க்கும் ரசிகர்கள், நல்ல தூங்கிட்டு படத்தை பார்க்க வாங்க என்று கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு காரணம் முதல் காட்சி ரசிகர்களுக்கு புரியவில்லை என்றால் அது எதிர்மறை விமர்சனங்களை பெற்றுவிடுகிறது. இதை மனதில் வைத்துக் கொண்டுதான் கெளதம் மேனன் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web