விஜய் ரசிகர்களுக்கு பொங்கலுக்கு விருந்து கொடுக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டம்..?
‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைத்துள்ளார். ‘தளபதி 67’ என்ற தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தை மாஸ்டர் படத்தைத் தயாரித்த லலித் குமார் தான் தயாரிக்கிறார். பிரபல இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரம்ஹம்சா தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ளார்.
இந்தப் படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டு உருவாகிறது. இந்த படத்தில் மும்பை தாதாவாக விஜய் மிரட்ட உள்ளார். இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் சஞ்சய் தத், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், உறியடி விஜயகுமார் உள்ளிட்டோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் இன்ட்ரோ வீடியோ ஒன்று தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை பிரசாத் ஸ்டுடியோ செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்று விடும் என கூறப்படுகிறது. இதையடுத்து வரும் பொங்கலுக்கு ப்ரோமோ வீடியோ வெளியிட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.