இயக்குனர் பார்த்திபன் தனது இன்ஸ்டாகிராமில் உருவாக்க வீடியோ பதிவு..!!

 
1

 நடிகர் பார்த்திபன் ‘ஒத்த செருப்பு’ படத்தைத் தொடர்ந்து நடித்து இயக்கிய திரைப்படம் ‘இரவின் நிழல்’. நான் லீனியர் திரைக்கதையில் ஒரே ஷாட்டில் உருவான இந்தப் படத்தில் பார்த்திபன் ‘நந்து’ எனும் சினிமா பைனான்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்தார். 

இந்நிலையில் இயக்குனர் பார்த்திபன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் உருவாக்க வீடியோ குறித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

வணக்கம் நண்பர்களே!
இரவின் நிழல் படத்தின் making/documentary
என் Radhakrishnan parthiban YouTube channel
மூலமாக வெளியிட முடிவெடுத்திருக்கிறேன்.புதிய channel என்பதால் பிரபலங்கள் மூலமாக பிரமாதமாக விளம்பரபடுத்தி வெளியிடலாம் என அறிவார்ந்தோர் கூறியதால் ….
தோ… உங்கள் முன் அக்கோரிக்கையை வைக்கிறேன்.முகவரியற்றிருந்த என்னை, வற்றியிருந்த என்னை பிரபலபடுத்தியதும் பலப்படுத்தியதும் நீங்கள் தானே!
Content தான் ஈர்க்கவல்லது என்பதாலும்,
இரவின் நிழல் making உங்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாயிருப்பது என்பதாலும் தைரியமாக இம்முடிவிற்கு வந்திருக்கிறேன்.பார்த்த சிலர் பார்க்கும்படி பலரிடம் கூற கூற,ஒரு சாதனை அரங்கேறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
நாளையே கூட இது நடைபெறும் உங்களின் ஆதரவோடு…
நன்றியுடன்,
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

From Around the web