லைப்ல உனக்கு என்ன பண்ணனும் தோணுதோ அதை செய்.. வெளியான நித்தம் ஒரு வானம் ட்ரைலர்..!!

அசோக் செல்வன், ரீது வர்மா, ஷிவாத்மிகா மற்றும் 'சூரரைப்போற்று' படத்துக்காக தேசிய விருது பெற்ற அபர்ணா பாலமுரளி ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் , 'நித்தம் ஒரு வானம்'. இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கியுள்ள இந்தப்படத்தை, ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்துள்ளார்.
ரிது வர்மா மாடர்ன் பெண்ணாகவும், அபர்ணா பாலமுரளி கிராமத்து பெண்ணாகவும் நடித்துள்ளனர். இப்படத்தில் ஷிவாத்மிகா ராஜசேகர் கல்லூரி பெண்ணாக நடிக்கிறார். ஓ மை கடவுளே படத்தை ஒளிப்பதிவு செய்த வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்கிறார். பெங்களூர் டேஸ், சார்லி, தோழா, கீதா கோவிந்தம் ஆகிய படங்களுக்கு பெயர் பெற்ற கோபி சுந்தர் இசையமைக்கிறார்.
படம் வரும் நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.