கோலிசோடா படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகை சாந்தினி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா ? 

 
1

'கோலிசோடா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாந்தினி. சென்னை சேர்ந்த அவர், எத்திராஜ் கல்லூரியில் பயின்றவர். கல்லுரி படிக்கும் போதே 'கோலிசோடா' படத்திற்காக இயக்குனர் விஜய் மில்டன் சாந்தினியை அணுகியுள்ளார். முதலில் தயங்கிய சாந்தினி, பின்னர் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார். அதன்பிறகு விஜய் மில்டன் நினைத்தப்படியே நடித்தும் கொடுத்தார். 

இந்த படத்திற்கு பிறகு விக்ரமின் 'பத்து என்றதுக்குள்ள' கதாநாயகனின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்து ஜீவாவின் 'சீறு' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து 'குரங்கு கையில பூமாலை' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படம் போதிய வெற்றியை பெறவில்லை. 

தனது படம் தோல்வியை தழுவியதால் அதன்பிறகு சினிமாவில் இருந்து விலகினார். சில காலம் ஒதுங்கியிருந்த அவர், சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சாந்தினிக்கு குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. தனது குழந்தையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சாந்தி பகிர்ந்துள்ளார்.  ‌

From Around the web