நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா மகளின் பெயர் தெரியுமா..?

 
1

பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் பாடகர் நிக் ஜோனஸ் இருவரும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு அழகான குழந்தைக்கு பெற்றோர் ஆயினர்.வாடகைத் தாய் மூலம் தங்களின் முதல் குழந்தை இந்த பூமிக்கு வந்ததை அவர்கள் இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர். பிரியங்கா நிக் தம்பதியினர் தங்கள் குழந்தை பிறந்ததை ஆறு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 21 அன்று இன்ஸ்டாகிராம் பதிவு மூலம், "வாடகைத் தாய் மூலம் எங்கள் குழந்தை பூமிக்கு வந்துள்ளது. இதை தெரிவிக்க நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மகிழ்ச்சிகரமான நேரத்தில் நாங்கள் ப்ரைவசியை எதிர்பார்க்கிறோம். மிக்க நன்றி" என்று அறிவித்தனர்.அதன்பிறகு, பிரியங்கா ஜோனஸ் ஜோடி குழந்தையை பற்றி எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை, குழந்தை ஆணா பெண்ணா என்றுகூட தெரியாமல் இருந்தது. 

பிரியங்கா மற்றும் நிக்கின் குழந்தைக்கு மால்தி மேரி சோப்ரா ஜோனஸ் (Malti Marie Chopra Jonas) என்று பெயரிடப்பட்டுள்ளதாக டிஎம்எஸ் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மூலம் இந்த தகவலக்ள் தெரியவந்துள்ளதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. 

1

From Around the web