‘டான்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு என்ன ரோல் தெரியுமா ?
Apr 26, 2022, 07:05 IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டான்’ திரைப்படம் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் முதலில் மார்ச் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது ஆனால் சில காரணங்களால் தள்ளிப்போனது.இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
கடைசியாக எஸ்.ஜே.சூர்யா ‘மாநாடு’ படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி இருப்பார். இப்போது ‘டான்’ படத்தில் நடிகர் பூமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் பேராசிரியராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
 - cini express.jpg)