பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

 
1

சார்கார் திரைப்படத்தை தயாரித்த சன்பிக்சர்ஸ் நிறுவனம், பீஸ்டையும் தயாரித்துள்ளது.

அனிரூத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கும் பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான  முதல் சிங்கள் பட்டி தொட்டி எல்லாம் பரவி செம ஹிட் அடித்தது. 

இந்நிலையில், பீஸ்ட் ஹீரோயினாக நடித்த பூஜா ஹெக்டேவுக்கு, இப்படத்தில் நடித்தற்காக வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் சுமார் 2 கோடி ரூபாய் பெற்று வந்த அவருக்கு பீஸ்ட் படத்தில் 3.5 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடித்த அவர், அதன்பிறகு தெலுங்கு திரையுலகுக்கு சென்றார். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்த பூஜா ஹெக்டே, தெலுங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு திரும்பிய அவர், பீஸ்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மிகப்பெரிய தொகை சம்பளமாக கிடைக்கும் என்பதை அவர் எதிர்பார்க்கவில்லையாம். விஜய் படம் என்றவுடன் ஓகே சொன்ன அவருக்கு, இவ்வளவு தொகை சம்பளமாக கிடைத்ததையடுத்து மகிழ்ச்சியுள்ளாராம்.

From Around the web