ஆதிபுருஷ் டீசர் பார்த்த பின் பிரபாஸ் என்ன சொன்னார் தெரியுமா ?

 
1

இயக்குனர் ஓம் ராவத் இயக்கி இருக்கும் திரைப்படம் ஆதி புருஷ். பாகுபாலி வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளியான 2 படங்களும் படு தோல்வியில் முடிந்தன. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் ஆதி புருஷ் படத்தை பெரிதும் நம்பி இருந்தனர்.

இந்நிலையில்,  ஆதி புருஷ் 3டி டீசர் வெளியீட்டு விழாவில் பிரபாஸ் கூறியதாவது, “இதை 3டியில் நான் பார்க்கும் போது, குழந்தையாக உணர்ந்தேன். அதில் வரும் மிருகங்கள் உங்கள் கண் முன் தோன்றுவது போல் இருக்கும். இது போன்ற 3டி காட்சி இதுவரை இந்தியாவில் அமைக்கபடவில்லை. இப்படம், திரையரங்கில் வெளியிட உருவாக்கப்பட்டது அதுவும், 3டியில் பார்க்க உருவாக்கப்பட்டது.

ஆதிபுருஷ் படத்தை 3டியில் பார்த்து மகிழுங்கள். வரும் வாரங்களில், ஆதிபுருஷ் குழு ஒரு முக்கிய தகவலை வெளியிடும். இந்த 3டி டீசரை மக்கள் காண, 60 தியேட்டர்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று பிரபாஸ் விளக்கம் கொடுத்தார்.

 3டி டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் பிரபாஸ் கூறிய விஷயத்தால் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

 

From Around the web