டான் பட ட்ரைலர் எத்தனை மணிக்கு ரிலீஸ் தெரியுமா …?

 
1

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'டான்' திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகை பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி, பாலசரவணன், ஷிவாங்கி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 

இந்தப் படத்திற்கு கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மே 13-ம் தேதி படம் வெளியாக இருப்பதால் படத்திற்காக ப்ரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

தற்போது ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் விழா இன்று  சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் நடைபெறவுள்ளது.இதுகுறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.மேலும் சிவகார்த்திகேயனின் டான் பட ட்ரைலர் இன்று  இரவு 7 மணிக்கு ரிலீசாகும் என சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார் .


 

From Around the web