சண்டையில உன்ன ஜெயிக்க வெக்க போறது எது தெரியுமா ? வெளியான கலகத்தலைவன் படத்தின் டிரெய்லர்..!!

 
1

தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோக்களில் உதயநிதியும் ஒருவர். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான  ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படத்திற்கு முன்னரே மகிழ் திருமேனி இயக்கத்தில்  உருவாகும் படத்தில் உதயநிதி நடித்து வந்தார்.  இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.

1

இவர்களுடன் கலையரசன், பிக்பாஸ் ஆரவ் உள்ளிட்டேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக உதயநிதி மாறியுள்ளது தெரிகிறது. ரத்தம் தெறிக்க உருவாகியுள்ள இந்த டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

.

From Around the web