பொன்னியின் செல்வன் 2 எப்போ ரிலீஸ் தெரியுமா ? காத்துவாக்குல ரிலீஸ் தேதியை கசியவிட்ட உதயநிதி..!!

 
1

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் கதையை தற்போது இயக்குனர் மணிரத்னம் படமாக்கியுள்ளார்.  இப்படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ,விக்ரம் பிரபு , சரத்குமார் ,பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய் ,திரிஷா ,ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள நிலையில் இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இதுவரை ரூ. 500 கோடி மேல்  வசூலித்துள்ளது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதியை நடிகரும், தயாரிப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்திய பேட்டியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறினார். அதுமட்டுமின்றி இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தான் வெளியிட உள்ளது என்பதையும் அவர் உறுதிபடுத்தி உள்ளார்.

From Around the web