பொன்னியின் செல்வன் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா ? - வெளியான முக்கிய அப்டேட்!

 
1

 இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். உலகம் முழுதும் வெளியான இத்திரைப்படத்தை, சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களும் திருவிழா போல கொண்டாடினர். 5,500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்தப்படம், இந்த ஆண்டு வெளியான விக்ரம் உட்பட அனைத்து தமிழ் படங்களின் வசூலையும் முறியடித்து சாதனை படைத்து இருக்கிறது.     

திரையரங்குகளில் படம் வெளியாகி 4 வாரங்கள் முடிந்திருக்கும் நிலையில், படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என்ற சலுகை இருக்கிறது. ஆனால்  ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தற்போது வரை நல்ல வசூலை ஈட்டி வருவதால், படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிபோய் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த தகவலின் படி, பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் 11 ஆம் தேதி படம் ஓடிடியில் வெளியிடப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. முன்னதாக படத்தின் ஓடிடி உரிமையானது 125 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

From Around the web