ரம்யா பாண்டியனுக்கு திருமணம் எப்போது தெரியுமா ? அவரே சொன்ன பதில்..!! 

 
1

தமிழில் ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ரம்யா பாண்டியன். டம்மி டப்பாசு, ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். ரம்யா பாண்டியன் சில மாதங்களுக்கு முன்பு தனது கவர்ச்சி புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவிட்டார். அவை இணைய தளங்களில் தீயாய் பரவின. பட வாய்ப்புகளும் வந்தன.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஒரு ரசிகர் உங்களுக்கு எப்போது திருமணம்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து ரம்யா பாண்டியன் கூறும்போது, “திருமணம் செய்து கொள்ள முதலில் ஒருவரை நான் கண்டுபிடிக்க வேண்டும். அவருக்கும் என்னை பிடிக்க வேண்டும். இன்னும் அப்படி ஒருவரை நான் கண்டுபிடிக்கவில்லை. எனவே, இப்போது திருமணத்துக்கு வாய்ப்பு இல்லை” என்றார்.

From Around the web