விக்ரமின் கோப்ரா ரிலீஸ் எப்போது தெரியுமா ?

 
1

'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படம் 'கோப்ரா'. ஸ்பை திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பல கெட்டப்புகளில் தோன்ற இருக்கிறார். 

கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். , முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. 

இந்நிலையில்,படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

From Around the web