வாரிசு படத்தின் டீசர் எப்ப ரிலீஸ் தெரியுமா ..?
Nov 13, 2022, 10:05 IST

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். பொங்கலுக்கு வெளியாகும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.
வாரிசு படத்தில் இடம்பெற்ற “ரஞ்சிதமே” பாடல் வெளியான சில மணி நேரங்களில் இந்த பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கி ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது..இந்த படத்துடன் அஜித்தின் துணிவு படமும் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு கோலிவுட்டில் காணப்படுகிறது.
இந்நிலையில் வாரிசு படத்தின் டீசர் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளிவர அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக புத்தாண்டையொட்டி வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.