வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா எந்த டிவியில் ஒளிபரப்பாகிறது தெரியுமா?

 
1

விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வாரிசு'. தெலுங்கில் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வரும் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த படம் வெளியாகும் அதே தேதியில் அஜித்தின் ‘துணிவு’ படம் வெளியாவதால் இரண்டு படங்களுக்கும் சமமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படம் போன்று இல்லாமல் குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகி வருகிறது. 

இந்நிலையில்,  வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை, டிசம்பர் 24, மாலை 4 மணிக்கு பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. அதற்கான அறிவிப்பும் தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.


இந்நிலையில் வாரிசு இசை வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. சன் டிவியும் ட்விட்டரில் அதை உறுதி செய்திருக்கிறது. ஆனால் நேரடி ஒளிபரப்பு என குறிப்பிடவில்லை.


 

From Around the web