கணவர் இறந்து மூன்று மாதங்களே ஆன நிலையில் இப்படியொரு பிறந்தநாள் தேவையா மீனா..? நெட்டிசன்கள் கேள்வி..!!

 
1

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மீனா . அதன்பிறகு அவர் நடித்த எஜமான், வீரா, முத்து, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன. 

meena

பிசியாக நடித்துக் கொண்டிருந்த மீனா, பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார்.மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி உயிரிழந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடிகை மீனாவின் 46வது பிறந்த நாள். இதையடுத்து, நடிகை சினேகாவின் சகோதரி சங்கீதா, தொழிலதிபர் ரேணுகா பிரவீன் மற்றும் கீது நாயுடு ஆகியோருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் நடிகை மீனா. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், கணவர் இறந்து மூன்று மாதம் கூட நிறைவடையாத நிலையில் மீனா தனது பிறந்தநாளை கொண்டாடி இருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.இதை பார்த்த நெட்டிசன், கணவர் இறந்து மூன்று மாதங்களே ஆன நிலையில் இப்படியொரு கொண்டாட்டம் தேவையா என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

From Around the web