இவரை ஞாபகம் இருக்கா..?‘வெண்ணிலா கபடி குழு’ பட நடிகருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை..! 

 
1

சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தனது முதல் படத்திலேயே எதிர்கால சினிமாவில் தனக்கென்று ஒரு முத்திரை பதிக்க போகிறார் என்பதைத் தன் நடிப்புத் திறமையால் நிரூபித்துக் காட்டினார் விஷ்ணுவிஷால். இயக்குனர் சுசீந்திரனுக்கும் இது தான் முதல் படம். 

1

இந்த படத்தில் சூரி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி, ஹரி வைரவன் என பல நடிகர்கள் நடித்திருந்தனர். சரண்யா மோகன் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் நடித்த ஹரி வைரவன், குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது அவரது உடல்நிலை குறித்து தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . சர்க்கரை நோய், கரோனரி இதய நோய், ஒவ்வொரு சிறுநீரகமும் செயலிழந்து போவது போன்ற பல்வேறு நோய்களால் அவர் பாதிக்கப்பட்டு, நடமாட முடியாமல், தனது மனைவியின் உதவியுடன் ஒவ்வொரு நாளும் நரகம் போல கழித்து வருகிறார்.

1

தற்பொழுது வெளியான தகவல்படி மருத்துவர்கள் ஆறு மாதம் தான் உயிரோடு இருப்பார் என கை விரித்து விட்டதாகவும், தன்னை கருணை கொலை செய்ய சொல்லி கேட்டதாகவும் ஹரிவைரவனின் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். நடிகராக வேண்டும் என்றும், கஷ்டப்பட்டு அலைந்து திரிந்து, ஓரிரு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், இப்படி ஒரு துயரமா என பலர் கேட்டு வருகின்றனர்.

From Around the web