சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க ஆசையா?.... அப்போ உடனே கிளம்புங்க ஆடிஷனுக்கு..!!

 
1

 ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம்  'லால் சலாம்' . '3', 'வை ராஜா வை' ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இயக்குநராகக் களம் இறங்குகிறார்.

'லால் சலாம்' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஐஸ்வர்யாவின் 'பயணி' ஆல்பத்திற்கு ஒளிப்பதிவு செய்த விஷ்ணு ரங்கசாமி, இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர் ஆகிறார். 

1

இந்த படம் கிரிக்கெட் தொடர்பான கதை என்றும் ரஜினி முக்கியமான சிறப்புத் தோற்றத்திலும் நடிப்பார் என தகவல் வெளியானது இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கான பூஜை கடந்த 5ஆம் தேதி நடந்தது..

இந்நிலையில் லால் சலாம் படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறவிருக்கிறது. ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் இந்த ஆடிஷனில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆடிஷனானது இன்று  (நவம்பர் 25)  காலை 10 மணி முதல் 6 மணிவரை திருவண்ணாமலை கங்கா நகர், செங்கம் ரோட்டில் அமைந்திருக்கும் சே ஸ்டுடியோவில் நடக்கவிருக்கிறது. நடிப்பில் ஆர்வமுள்ளவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிப்பதால் அவருடன் நடிக்கும் வாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கலாம்.

1

From Around the web