வாரிசு இசை வெளியீட்டு விழா டிவியில் பார்க்கணுமா ?.. அப்போ இந்த தேதி வரை காத்திருங்க..!!
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தோழா, மஹரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.
தமன் இசையமைக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா, ஷண்முகம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் பொஙகலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் களமிறங்க இருக்கிறது.
வாரிசு படத்தில் இருந்து முதல் பாடல் ‘ரஞ்சிதமே’ 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களையும், இரண்டாவது பாடல் ‘தீ தளபதி’ 26 மில்லியன் (2.6 கோடி) பார்வையாளர்களையும் யூடியூபில் சமீபத்தில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 3வது பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 24) நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது . இதற்கான டிக்கெட் விலைகள் அதிக அளவுக்கு விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் சர்சையானது.
விஜய்யின் பேச்சுக்கு ஆர்வமாக காத்திருக்கும் ரசிகர்கள் இந்த இசை வெளியீட்டு விழாவை பார்க்க வேண்டுமானால் காத்திருக்க வேண்டும். நேரடி ஒளிபரப்பு செய்யாமல் சன் டிவி நிறுவனம் இதன் ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியுள்ளது. புத்தாண்டையொட்டி ஜனவரி 1-ம் தேதி இந்த விடியோவை சன் டிவி வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.