இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா ?

 
1

ரஜினி நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதன்படி லைகா நிறுவனத்துடன் இணைந்து அடுத்தடுத்து இரண்டு படங்களுக்கு ரஜினி ஒப்பந்தம் மேற்கொண்டார். இதில் ஒரு படத்தின் பூஜை இன்று நடைபெறும் என்று அறிவிப்பு வந்த நிலையில் தற்போது அதன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'லால் சலாம்' என்ற தலைப்பில் இயக்கவுள்ளார். இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இசை பணிகளை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொள்கிறார்.

‘லால் சலாம்’ திரைப்படம் 2023ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

From Around the web