மிஸ் பண்ணாம இந்த படத்தை ஒடிடி-யில் பாருங்க..!! 

 
1

அறிமுக இயக்குநர் முத்துகுமார் இயக்கி, எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் தயாரிப்பில் 'அயலி' உருவாகியுள்ளது.  8 எபிசோட்கள் உள்ள இந்த வெப்-சீரிஸில் அபி நக்ஷத்ரா, அனுமோல், அருவி மாடன், லிங்கா, சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வீரப்பண்ணை என்னும் கிராமத்தில் அயலி தேவி என்ற சிறுமியின் வாழ்க்கையை கூறுகிறது இந்த 'அயலி' வெப்-சீரிஸ். மருத்துவராக வேண்டும் என்ற அயலியின் கனவு, அந்த கிராமத்தால் எப்படி பாதிப்புக்குள்ளாகிறது என்பது இதன் மீதிக்கதை. குறிப்பாக, சிறுமிகள் பூப்படைந்த உடன் அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் வழக்கத்தை உடைய அந்த கிராமத்தில் அயலி எப்படி மீட்சியடைகிறாள் என்ற கதைக்கரு பலரையும் ஈர்த்துள்ளது. 

1

சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல கருத்தை எடுத்துக் கூறியுள்ளார் இயக்குனர் முத்துக்குமார். கதையின் முக்கிய கதாபாத்திரமாக வரும் அபி நட்சத்திரா தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். க்ளோசப் காட்சிகளில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார். அபியின் அம்மாவாக நடித்திருக்கும் அனுமால் அந்த கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்துள்ளார். நாம் அன்றாடம் பார்க்கும் ஒருவர் போல் நம் மனதிற்கு தோன்றியிருக்கிறார். 

கதையின் இடை இடையிடையே வரும் சில காமெடி காட்சிகளும் நன்றாக உள்ளது. 1990-களில் நடைபெறும் கதை என்றாலும் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும் விதமாக தான் அயலி உள்ளது. பெண்களை இந்த உலகம் எப்படி பார்க்கிறது, எப்படி நடத்துகிறது என்பதை ஆணித்தனமாக எடுத்து கூறி உள்ளது. 

Zee5 ஓடிடியில் 'அயலி' வெப்-சீரிஸ் கடந்த ஜன. 26ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது 

From Around the web