படிப்பு என்பது பிரசாதம் மாதிரி கொடுங்க... விக்காதீங்க..!! தெறிக்கவிடும் வாத்தி படத்தின் டீஸர்..!! 

 
1

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.இந்தப் படத்தை தோழி பிரேமா', 'மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்குகிறார். நடிகை சம்யுக்தா மேனன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை சிதாரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். படத்திற்கு வாத்தி என்று தமிழிலும் சார் என்று தெலுங்கிலும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. 

தனுஷின் பிறந்தநாளான நேற்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கு வகையில் 'வாத்தி' படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. மேலும் தனுஷின் பிறந்தநாள் விருந்தாக ரசிகர்களுக்கு இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அக்‌ஷன் காட்சிகளில் உருவாகியுள்ள இந்த டீசர் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


 

From Around the web