பிரபல நடிகர் ஹிப்ஹாப் ஆதி வீட்டின் மீது கல்வீசி தாக்குதல்..!!

 
1

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் சீ கிளிப் அவென்யூ 5வது டிரைவ் தெருவில் வசித்து வருபவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. 

இவரது வீட்டின் கதவில் மர்ம நபர்கள் சிலர் குடிபோதையில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஹிப்ஹாப் தமிழா ஆதி வீட்டின் கதவு சேதமாகியுள்ளது. எதிர் வீட்டில் வசிப்பவர்கள் இதனைக் கண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடாந்து அங்கு வந்த போலீசாரை கண்டதும், மர்ம நபர்கள் காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களின் காரின் பதிவெண்ணை கண்டுபிடித்தனர். அதை வைத்து காரின் உரிமையாளரான அஜய் வாண்டையாரின் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்தனர்.

1

விசாரணையில் அவர்கள், அஜய் வாண்டையாரின் ஆக்டிங் டிரைவர் என்பது தெரியவந்தது. பின்னர் விசாரணை நடத்தியதில், வடபழனியை சேர்ந்த பிரேம்குமார் (24), மதுரையை சேர்ந்த அர்ஜூன்(24) ஆகிய இருவரையும் கைது செய்த கானத்தூர் போலீசார், அவர்களிடம் விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.

From Around the web