2-ம் வகுப்பு மாணவி கூட பார்க்காமல் அத்துமீறிய ‘எலி’ பட நடிகர் கைது..!!

 
1

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சினிமா உதவி இயக்குநர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 6 வயது மகள் தனியார் பள்ளியில்  2-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இந்த சிறுமி விளையாடுவதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்திற்கு சென்றுள்ளார்.

Minor-girl-raped

அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் சினிமா துணை நடிகர் எலி ராஜூ (49) அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் சினிமா துணை நடிகர் ராஜூவைப் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து ராஜூ மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Man-gets-106-years-jail-term-for-raping-impregnating-minor-daughter

போலீசாரால் கைது செய்யப்பட்ட துணை நடிகர் ராஜூ, நடிகர் வடிவேலு நடித்த எலி உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகராக பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web