பிரபல நடிகருக்கு நிச்சயதார்த்தம்.. ரசிகர்கள் வாழ்த்து!

 
1

 ‘காதல்னா சும்மா இல்ல’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஷர்வானந்த். அதனைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் ஷார்வானந்த் நடித்த ‘எங்கேயும் எப்போதும்’ படம் அழுத்தமான வெற்றியைப் பதிவு செய்தது.

sharwanand

தொடர்ந்து சேரனின் ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ போன்ற சில தமிழ் படங்களில் ஷர்வானந்த் நடித்திருந்தார். கடைசியாக ஷர்வானந்த் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவான ‘கணம்’படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் எந்த பின்புலமும் இல்லாமல் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் ஷர்வானந்த்.

இந்த நிலையில், 38 வயதாகும் ஷர்வானந்த்துக்கு ரக்ஷிதா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஷர்வானந்த் மணக்கவிருக்கும் ரக்ஷிதா அமெரிக்காவில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் அரசியல் பின்புலம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஷார்வானந்த், ‘இந்த அழகான பெண்ணுடன் எனது வாழ்க்கையின் புதிய அத்தியாத்தில் அடியெடுத்து வைக்கிறேன். உங்கள் ஆசிர்வாதம் தேவை’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 

From Around the web