என்ன ஆச்சு பூமி... பயந்துட்டியா... வெளியான 'நான் மிருகமாய் மாற’... ஸ்னீக் பீக் காட்சி..!!

 
1

சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘நான் மிருகமாய் மாற’. இந்த படத்தை கழுகு படங்களை இயக்கிய  சத்ய சிவா இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக ஹரிப்பிரியா நடித்துள்ளார். வில்லனாக நடிகர் விக்ராந்த் நடித்துள்ளார். இவர்களுடன்  மதுசூதனன், துளசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

செந்தூர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.  சஸ்பென்ஸ் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் நவம்பர் 18-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. 

From Around the web