நிம்மதியா தூக்கத்திலேயே.. உயிர் போயிடணும்னு சொல்வார்.. அப்படியே மறைந்து விட்டார் பிரதாப் போத்தன்..!!

1

பிரபல நடிகர் பிரதாப் போத்தன்(69) சென்னையில் தனது வீட்டில் காலமானார்.பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்பட மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரதாப் போத்தன்.தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றிவிழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார். மீண்டும் ஒரு காதல் கதை படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றார். 

இயக்குநர் மணிரத்னம், பி.சி. ஸ்ரீராம் ,கமல் உள்ளிட்ட திரை ஆளுமைகள் நடிகர் பிரதாப் போத்தனின் வீட்டிற்கே சென்று நேரில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர். மலையாள திரையுலகின் சார்பாக நடிகை கனிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிகர் பிரதாப் போத்தன் மறைவு செய்தி அறிந்ததும் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

CINEMA NEWS

தூக்கத்திலேயே போயிடணும்னு சொன்னாரு..நடிகை கனிகா கண்ணீர் மல்க பேட்டி

By

Published on July 15, 2022

திரைப்பட நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன்(69) சென்னையில் தனது வீட்டில் காலமானார். பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்பட மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தியில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றிவிழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார். மீண்டும் ஒரு காதல் கதை படத்திற்காக அவர் தேசிய விருது பெற்றார்.

இயக்குநர் மணிரத்னம், பி.சி. ஸ்ரீராம் ,கமல் உள்ளிட்ட திரை ஆளுமைகள் நடிகர் பிரதாப் போத்தனின் வீட்டிற்கே சென்று நேரில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர். மலையாள திரையுலகின் சார்பாக நடிகை கனிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிகர் பிரதாப் போத்தன் மறைவு செய்தி அறிந்ததும் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

ஃபைவ் ஸ்டார், ஆட்டோகிராஃப், எதிரி, வரலாறு, யாதும் ஊரே யாவரும் கேளீர், கோப்ரா உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிகை கனிகா நடிகர் பிரதாப் போத்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில், மரணம் பற்றி அவர் பேசும் போது, நிம்மதியா தூக்கத்திலேயே.. உயிர் போயிடணும்னு சொல்வார்.. அப்படியே இன்று மறைந்து விட்டார் என மிகவும் உருக்கமாக பேசி உள்ளார்.

From Around the web