இனி வரும் ஒவ்வொரு நாளும் சிவராத்திரி தான்..வைபவ் நடிக்கும் ‘பபூன்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு !

கார்த்திக் சுப்புராஜின் நிறுவனமான ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் தயாரித்து வரும் திரைப்படம் ‘பபூன்’. ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள இந்த படத்தை அசோக் வீரப்பன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘நட்பே துணை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற அனகா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஆந்தங்குடி இளையராஜா, நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக தினேஷ் புருஷோத்தமன் பணியாற்றிவுள்ளார். புலனாய்பு பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது.
ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. வைபவ் ஆக்ஷன் அதிரடியில் கலக்கியுள்ள இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.