மிஷனுக்கு போற எல்லாத்துக்கும் ஒரு கோட் நேம் இருக்கு ...வருகிறது சர்தார் 2 ... வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!!  

 
1

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த அக்டோபார் 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘சர்தார்’. இந்த படத்தில் ராஷி கண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, சங்கி பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  உலகம் முழுவதும் திரையங்குகளில் வெளியான இப்படம் நல்ல விமரசனங்களை பெற்றுள்ளது. 

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ‘சர்தார் 2’ படத்தின் இரணடாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாகவும், ‘கைதி 2’ படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது . இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், சர்தார் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியீட்டு சர்தார் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாகும் என அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறார்கள்.


 

From Around the web