எல்லாத்தையும் ஓபன் ஆஹ் சொல்ல முடியாது டா... அனல் மேலே பனித்துளி டிரெய்லர்..!!

 
1

பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆன்ட்ரியா. தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார். இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். தற்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது ஆண்ட்ரியா 'அனல் மேலே பனித்துளி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை கைஸர் ஆனந்த் என்பவர் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கிறார். 

இந்தப் படம் வரும் நவம்பர் 18-ஆம் தேதி நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.  

From Around the web