எல்லாம் அவன் செயல் நடிகரின் வீட்டில் கொள்ளை... நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு கொள்ளையடிப்பு... வாட்ச்மேன் உடந்தையா? 

 
1

தமிழில் 'எல்லாம் அவன் செயல்', 'அவன் இவன்', 'அழகர் மலை' ஜில்லா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ராதாகிருஷ்ணா (எ) ஆர். கே. 63 வயதான ஆர்கேவுக்கு 53 வயதில் ராஜி என்ற மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி பகுதியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், ராதாகிருஷ்ணா நேற்று (நவ. 10) , வெளியே சென்றுவிட்டதால் வீட்டில் மனைவி ராஜி மட்டும் தனியாக இருந்து வந்தார். அப்போது திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல், வீட்டிற்குள் நுழைந்து ராஜியை கட்டிப்போட்டு வாயில் பிளாஸ்டர் ஒட்டி உள்ளனர். இதனையடுத்து அந்த கும்பல் வீட்டின் பீரோவில் இருந்த 250 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர். 

1

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.பின்னர், வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நடிகர் ராதாகிருஷ்ணா வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த நேபாள நாட்டை சேர்ந்த வாட்ச்மேன் ரமேஷ் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, ராதாகிருஷ்ணா அளித்த புகாரின் பேரில் நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் வெளிமாநிலத்திற்கு தப்பி செல்லாதவாறு விமான நிலையம், ரயில் நிலையத்திற்கு கொள்ளையர்களின் புகைப்படத்தை அனுப்பி பிடிக்குமாறும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

From Around the web