டோலிவுட்டில் பரபரப்பு..!! சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை கன்னத்தில் அறைந்தாரா கீர்த்தி ..?
Wed, 4 May 2022

மகேஷ் பாபு தனது அடுத்த பிரம்மாண்டமான சர்க்காரு வாரி பாடாவின் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார், இது மே 12, 2022 அன்று வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இந்தப் படம் குறித்து பேசுகையில், “காட்சிக்கு ஏற்ப நடிக்கும்போது எனது பக்கம் தவறு நடந்துவிட்டது. தெரியாமல் மகேஷ் பாபுவின் முகத்தில் அடித்துவிட்டேன். உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதனால் ஒன்றும் இல்லை. கவலைப்பட வேண்டாம் என அவர் என்னிடம் கூறினார்.
இருந்தாலும் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. 3 முறை அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். இந்தப் படத்தில் கலாவதி என்ற வேடத்தில் நடித்திருக்கிறேன். இதுவரை நான் நடித்துள்ள படங்களில் நடித்திராத வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறேன்” என்றார்.