போடுற வெடிய..!! துணிவு படத்தின் ரிலீஸ் தேதி இது தான் - அதிகாரபூர்வ அறிவிப்பு..!!  

 
1

 நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் எச்.வினோத்துடன் இணைந்துள்ள படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. பொங்கலுக்கு படம் வெளியாக உள்ள நிலையில் அடுத்தடுத்து பட அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர்.

1

துணிவு மற்றும் வாரிசு படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படாமல் தான் இருந்தது.அதனால் பல குழப்பங்கள் இருந்து வந்தது. இரண்டும் ஒரே நாளில் வருமா, தியேட்டர்கள் எந்த படத்திற்கு அதிகம் கிடைக்கும் என பல்வேறு கேள்விகள் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கிறார். ஜனவரி 11ம் தேதி துணிவு திரைக்கு வருகிறது.வாரிசு அதே நாளில் வருமா அல்லது அடுத்த நாள் ரிலீஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


 

From Around the web