போடுற வெடிய..!! இணையத்தை தெறிக்கவிடும் விஜய் - அஜித் ரசிகர்கள் !

 
1

எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘துணிவு’. 80-களில் நடந்த பஞ்சாப் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று ஹீரோவாகவும், மற்றொன்று வில்லனாகவும் இருக்கும் என தெரிகிறது. 

இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. இதையடுத்து தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என போனி கபூர் அறிவித்துள்ளார். அதேநேரம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதுதவிர தொலைக்காட்சியை உரிமையை கலைஞர் டிவியும், டிஜிட்டல் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளது. இதற்கிடையே விஜய்யின் 'வாரிசு' திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. விஜய் மற்றும் அஜித் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


விஜய் படிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாரிசு'. முதல்முறையாக நடிகர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி தூக்கி வருகிறார். தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படம் வரும் பொங்கலையொட்டி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிஜமாகவே இந்த பொங்கல் தல தளபதி ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக இருக்கும் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. 

From Around the web