பிக் பாஸ் பிரபலம் மீது எப்.ஐ.ஆர் பதிவு..!!
 

 
1

நடிகை ராக்கி சாவந்தின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது, அந்த வீடியோவில் பழங்குடியினரின் ஆடையை வைத்து கேலி செய்ததாக நடிகை மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பழங்குடியின சமூகத்தை கேலி செய்யும் வகையில் ராக்கி சாவந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவேற்றியதாக பழங்குடியினர் குழுவின் தலைவர் அஜய் டிர்கி கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில் ராக்கி சாவந்த் பழங்குடியினரை அவமதிக்கும் வகையில் உடை அணிந்துள்ளார். இதனால், அவர் மீது ஜார்கண்டை சேர்ந்த பழங்குடி சமூகம் கோபமடைந்து ராக்கி சாவந்திற்கு எதிராக எஸ்டி-எஸ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

From Around the web